Idhayam Matrimony

மெக்சிகோவில் பாதுகாப்பு அமைச்சக வாகனம் மீது மர்ம கும்பல் தாக்குதல்: 13 பேர் பலியான பரிதாபம்

வெள்ளிக்கிழமை, 19 மார்ச் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

மெக்சிகோ சிட்டி : மெக்சிகோ நாட்டில் போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் கும்பல் எண்ணிக்கை அதிகம். அவர்கள் தங்களுக்குள் மோதலில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் சுட்டு கொல்வதுடன், தங்களுக்கு எதிராக நடக்கும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளையும் விட்டு வைப்பதில்லை. 

சர்வதேச அளவில் போதை பொருட்களை கடத்தும் நாடுகளின் வரிசையில் ஒன்றாக மெக்சிகோ நாடு உள்ளது. இந்த நிலையில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு வாகனம் ஒன்றின் மீது மர்ம கும்பல் ஒன்று திடீரென தாக்குதல் நடத்தியுள்ளது. 

லானோ கிராண்ட் மாவட்டத்தின் கோட்டெபெக் ஹரினாஸ் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பாதுகாப்பு அமைச்சகத்தின் 8 அதிகாரிகள் கொல்லப்பட்டு உள்ளனர். இதுதவிர மெக்சிகோ மாநில வழக்கறிஞர் அலுவலக ஊழியர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். 

இதனை மண்டல பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது. 

இதனை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு படை, ராணுவம், கடற்படை மற்றும் நுண்ணறிவு பிரிவு ஆகியவை கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. எனினும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாரென இதுவரை தெரிய வரவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து