எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பாரீஸ் : கொரோனா 3-வது அலையை தடுக்க, பாரீஸ் உள்ளிட்ட 15 நகரங்களில் ஒரு மாத ஊரடங்கை பிரான்ஸ் அரசு பிறப்பித்துள்ளது.
கொரோனா வைரஸ் இன்னும் கட்டுக்குள் வந்தபாடில்லை. வைரஸ் பரவல் சற்று குறைவதும் பின்னர் அடுத்த அலையாக பரவுவதும் என இன்னமும் வைரஸ் உலக மக்களை அச்சுறுத்தியபடியே உள்ளது. தடுப்பூசி போடும் பணி ஒரு பக்கம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரான்ஸில் கொரோனா வைரசின் 3-வது அலை பரவியிருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக கடந்த 7 நாட்களாக புதிய கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருவதாக பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்டதைப் போலவே புதிய உருமாறிய கொரோனா பிரான்ஸ் நாட்டின் லானியன் மாகாணத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
பிரான்ஸில் தற்போது கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா, வழக்கமாக நடத்தப்படும் பி.சி.ஆர். சோதனைகளிலிருந்து தப்பிவிடுகிறது. எனவே இந்த உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிசிஆர் சோதனை நடத்தப்பட்டால் அவர்களுக்கு கொரோனா இல்லை என்றே முடிவில் தெரியவரும்.
இதனால் அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு எளிதில் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாரீஸ் உள்ளிட்ட 15 நகரங்களுக்கு ஒரு மாதம் ஊரடங்கை பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களான மளிகை கடைகள் மற்றும் பள்ளிகள் திறந்து இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


