முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேசம் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

வெள்ளிக்கிழமை, 26 மார்ச் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

டாக்கா : வங்கதேசத்துக்கு நேற்று 2 நாள் பயணமாக தனி விமானம் மூலம் சென்ற பிரதமர் மோடியை வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார்.

வங்காளதேச மக்கள் நேற்று 50-வது சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். கடந்த 1971-ம் ஆண்டு நடந்த வங்காளதேச விடுதலைப் போரில் வங்காளதேசத்தின் முக்தி வாகினி படையுடன் இணைந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் போரிட்டது.  இதைத் தொடர்ந்து 16-12-1971 அன்று பாகிஸ்தான் படைகளை சேர்ந்த 90 ஆயிரம் வீரர்கள் இந்தியாவிடம் சரண் அடைந்தனர்.

பாகிஸ்தானில் இருந்து பிரித்து வங்காளதேசம் என்ற புதிய நாட்டை இந்தியா உருவாக்கி தந்தது. இந்த போரில் உயிர் நீத்த வீரர்களுக்காக வங்காளதேசத்தின் சவர் பகுதியில் தேசிய போர் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2 நாள் பயணமாக நேற்று வங்காளதேசத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள தேசிய போர் நினைவிடத்திற்கு சென்றார். கொரோனா பரவத் தொடங்கிய பிறகு அவர் கடந்த ஓராண்டாக எந்த வெளிநாட்டுக்கும் செல்லவில்லை. வங்காளதேசத்தின் 50-வது சுதந்திர தினம் மற்றும் அந்நாட்டின் தேசத்தந்தை ஷேக் முஜிபூர் ரகுமானின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்ததையடுத்து நேற்று அவர் வங்காளதேசத்திற்கு சென்றார். 

நேற்று காலை வங்காளதேச தலைநகர் டாக்காவிற்கு தனி விமானம் மூலம் சென்ற பிரதமர் மோடியை வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா விமான நிலையத்திற்கே சென்று மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றார்.

தொடர்ந்து, அந்நாட்டு தேசிய கீதத்துடன், அந்நாட்டு ராணுவம் சார்பில் சிவப்பு கம்பள மரியாதை அளிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து வங்காளதேசத்தின் தேசிய போர் நினைவிடத்திற்குச் சென்ற பிரதமர் மோடி, போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.  15 மாதங்களுக்குப் பிறகு கொரோனா தொற்று பரவலுக்கிடையே பிரதமர் மேற்கொள்ளும் இந்த ஆண்டின் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

பிரதமரின் இந்த பயணத்தின்போது வங்கதேசத்தின் அரசியல், கொரோனா கட்டுப்பாடு குறித்தும் மேலும், இரு நாடுகளுக்கு இடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து