Idhayam Matrimony

நேபாளத்தில் காற்று மாசுபாடு - அனைத்து பள்ளிகளும் மூடல்

செவ்வாய்க்கிழமை, 30 மார்ச் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

காத்மண்டு : நேபாளத்தில் கடந்த சில நாட்களாக காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. இந்தியா - சீனா நாடுகளுக்கு இடையே இமயமலை பகுதியில் அமைந்துள்ள நேபாள நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பரவி வருகிறது. 

அதுமட்டுமின்றி, குப்பையை தீ வைத்து எரித்தல், வாகனப்புகை, கட்டுமானத்துறை பணியின் போது ஏற்படும் மாசு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்நாட்டில் கடுமையான காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது. இந்தியா, சீனாவில் நிலவிவரும் காற்று மாசுபாடும் நேபாளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. 

இதற்கிடையில். காற்று மாசுபாடு காரணமாக பள்ளி செல்லும் மாணவ\மாணவிகளுக்கு, பொதுமக்களுக்கு பல்வேறு விதமான சுவாசப்பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளது. மேலும் பலருக்கும் கண் எரிச்சல், இருமல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளும் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. 

இந்நிலையில் தொடர்ந்து அதிகரித்து வரும் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதால் மாணவ\மாணவிகளின் உடல்நலை கருத்தில் கொண்டு நேபாளத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 2) வரை மூடப்படுவதாக அந்நாட்டு கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

காற்று மாசுபாடு காரணமாக நேபாளத்தில் பள்ளிகள் மூடப்படுவது இதுவே முதல்முறையாகும். ஏற்கனவே கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் நேபாள அரசுக்கு தற்போதைய காற்று மாசுபாடு கூடுதல் சுமையாக அமைந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து