Idhayam Matrimony

மியான்மரில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் - ராணுவத்துக்கு இந்தியா கடும் கண்டனம்

சனிக்கிழமை, 3 ஏப்ரல் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

யான்கூங் : மியான்மர் நாட்டில் ஜனநாயக ஆட்சியை கடந்த பிப்ரவரி 1-ந்தேதி ராணுவம் கவிழ்த்து விட்டு அதிகாரத்தை கைப்பற்றியது.

அந்நாட்டின் தலைவர் ஆங்சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்தை ஒடுக்க ராணுவம் துப்பாக்கி சூடு உள்ளிட்ட அடக்கு முறைகளை கையாண்டு வருகிறது.

500-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் மியான்மர் ராணுவத்துக்கு ஐ.நா. சபை மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் மியான்மரில் ராணுவத்தால் நடக்கும் வன்முறைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவு துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியதாவது:-

மியான்மர் நாட்டில் நடத்தப்படும் எந்தவொரு வன்முறைக்கும் இந்தியா கண்டனம் தெரிவித்து கொள்கிறது. அங்கு சட்டத்தின் ஆட்சி நிலை நிறுத்தப்பட்டு ஜனநாயகம் மீண்டும் தழைக்க வேண்டும். அங்கு கைது செய்யப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள் உள்ளிட்டவர்களை விடுவிக்க வேண்டும்.

மியான்மரில் தற்போது நிலவும் சூழலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு 10 தென்கிழக்கு ஆசிய நாடுகளை கொண்ட ஆசி யான் அமைப்பின் நடவடிக்கைகள் உள்பட அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. இதில் சர்வதேச நாடுகளுடனும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுடனும் இந்தியா தொடர்பில் இருந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து