எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி, பிரதமர் புகைப்படங்களை வைப்பது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
கடலூரைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி ஜெயக்குமார் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தமிழக அரசு அலுவலகங்களில் மகாத்மா காந்தி, நேரு, திருவள்ளுவர், அண்ணா, ராஜாஜி, பெரியார் ஆகியோரது புகைப்படங்களுடன் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் புகைப்படங்களையும் வைக்க வேண்டும் என்று 1978-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதன் பிறகு 1990-ம் ஆண்டு அம்பேத்கர் புகைப்படத்தையும், 2006-ம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், வ.உ.சி., காயிதேமில்லத், இந்திரா காந்தி, முன்னாள் முதல்வர்கள், இந்நாள் முதல்வர் மற்றும் தமிழன்னையின் படங்களையும் வைப்பதற்கு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தும் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் புகைப்படங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. எனவே அரசு அலுவலகங்களில் பிரதமர், ஜனாதிபதியின் புகைப்படங்களை வைக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் தேசிய தலைவர்களின் புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், புகைப்படங்களை கண்டிப்பாக வைக்க வேண்டும் என்று அந்த அரசாணைகளில் கட்டாயப்படுத்தவில்லை என்று வாதிட்டார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தலைவர்களின் புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வைக்க வேண்டும் என்று அரசாணை கட்டாயப்படுத்தாத நிலையில், ஜனாதிபதி, பிரதமர் புகைப்படங்களை வைப்பது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


