Idhayam Matrimony

சென்னை மெரினாவில் வார விடுமுறை நாட்களில் பொதுமக்கள் கூட தடை

சனிக்கிழமை, 10 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னை மெரினாவில் வார விடுமுறை நாட்களில் பொதுமக்கள் கூட தடைவிதித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் நேற்று (சனிக்கிழமையன்று) முகக்கவசம் மற்றும் தனிநபர் இடைவெளியின்றி மக்கள் கூட்டம் அலைமோதியதால், பெருந்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வார இறுதி நாளான சனிக்கிழமை விடுமுறையை கொண்டாடும் விதமாக மெரினா முதல் பட்டினப்பாக்கம் வரை மக்கள் குடும்பம் குடும்பமாக கடற்கரையில் குவிந்தனர்.

முகக்கவசம் மற்றும் தனி நபர் இடைவெளியை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையிலும், பெரும்பாலான நபர்கள் முக கவசம் மற்றும் தனிநபர் இடைவெளியின்றி கடற்கரையில் குவிந்திருந்தனர்.

இதனை அடுத்து சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் வார விடுமுறை நாட்களில் பொதுமக்கள் கூட தடைவிதித்து தமிழக அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதன்படி வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்று கிழமைகளில் பொதுமக்கள் கூடினால் இனி அபராதம் விதிக்கப்படும் என்று தெரிகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6000 தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து