எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சண்டிகர் : அரியானாவில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளால் மக்களின் கோபத்தைச் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால், உடல்களின் குவியலைக் காணத் தயாராக இல்லை என்று ஹரியாணா சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்தார்.
நாட்டில் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்துள்ளது. நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரியானாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கடும் கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
அரியானா அரசின் கட்டுப்பாடுகள் குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில்விஜ் அளித்த பேட்டியில்,
கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசு கொண்டு வரும் கட்டுப்பாடுகள் மக்களுக்குக் கடினமாகத்தான் இருக்கும். மக்களின் கோபத்தை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், மக்களின் உடல்களின் குவியலைப் பார்க்க நாங்கள் தயாராக இல்லை. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த இரு வழிகள்தான் இருக்கின்றன.
ஊரடங்கைக் கொண்டு வருவது. ஆனால், இப்போதுள்ள நிலையில் சாத்தியமானது அல்ல. மக்கள் தங்கள் வாழ்க்கையைப் பாதுகாப்பாகவும், பொருளாதாரத்தில் பாதிப்பு இல்லாமலும் வாழ வேண்டும்.
மற்றொரு வழி கட்டுப்பாடுகளைத் தீவிரமாகப் பின்பற்றுவது. ஆதலால், கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தி, கடுமையாக அமல்படுத்தக் கோரியுள்ளோம். மக்கள் கோபப்பட்டால் தாங்கிக் கொள்கிறோம். உடல்களின் குவியலைப் பார்க்க முடியாது எனத் தெரிவித்தார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


