Idhayam Matrimony

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க இலங்கை அரசு திட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 18 ஏப்ரல் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

கொழும்பு : கொரோனா தொற்று அதிகரிப்பை அடுத்து, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. 

இலங்கையில் நடப்பு ஆண்டில் 52 ஆயிரத்து 710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என இலங்கையின் மூத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினார். இவர்களில் 1,593- பேர் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்கள் என கூறப்படுகிறது. தனிமைப்படுத்தலின் போது இவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

வெளிநாடுகளில் இருந்து திரும்பும் பயணிகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்படுவது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நடப்பு மாதத்தில் 3,480 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதில் 538 பேர் வெளிநாடுகளில் இருந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

எனவே இந்த சூழலில் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்கள் குறித்த மேலாண்மை திட்டங்களை மறு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 168 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கொரோனா பரிசோதனை செய்து சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் அனைவரும் தங்களை கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து