Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 472 உயர்ந்தது: பவுன் மீண்டும் 36 ஆயிரத்தை எட்டியது

வியாழக்கிழமை, 22 ஏப்ரல் 2021      வர்த்தகம்
Image Unavailable

சென்னையில் நேற்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.472 அதிகரித்து ஒரு சவரன் ரூ.36 ஆயிரத்து 48-க்கு விற்பனையானது. 

தங்கம் விலை கடந்த மாத இறுதியில் ஏற்றதாழ்வுடன் இருந்து வந்தது.  அதன்பின் விலை உயர்ந்தபடி இருந்ததால் பவுன் மீண்டும் ரூ.35 ஆயிரத்தை தாண்டியது. இதற்கிடையே நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.384 குறைந்து ரூ.35 ஆயிரத்து 576-க்கு விற்பனையானது. இந்த நிலையில் நேற்று தங்கம் பவுன் மீண்டும் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது.  சென்னையில் நேற்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.472 அதிகரித்து ரூ.36 ஆயிரத்து 48-க்கு விற்பனை செய்யப்பட்டது.  கிராமுக்கு ரூ. 59 அதிகரித்து ரூ.4 ஆயிரத்து 506 ஆக இருந்தது. தங்கத்தை போல வெள்ளி விலையும் உயர்ந்து இருந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.73 ஆயிரத்து 900 ஆக இருந்தது.  ஒரு கிராம் வெள்ளி ரூ.73.90-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்ததால் விலை தொடர்ந்து உயர்ந்தது. வரலாறு காணாத வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்தை தாண்டியது. அதன் பின் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாக தங்கம் விலை குறைந்து வந்தது. தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதின் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து விலை உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தங்கம் பவுன் ரூ.36 ஆயிரத்தை எட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 2 days ago
View all comments

வாசகர் கருத்து