Idhayam Matrimony

ஆந்திரா, ஜார்கண்டில் இருந்து மகராஷ்டிரா, உ.பி.க்கு 2 ரயில்களில் ஆக்சிஜன்

வெள்ளிக்கிழமை, 23 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

ஆந்திரா, ஜார்கண்ட் மாநிலங்களில் இருந்து மகராஷ்டிரா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு 2 ரயில்களில் ஆக்சிஜன் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மகராஷ்டிரா, டெல்லி, மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், சண்டிகர் போன்ற மாநிலங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிக அதிகமாகி வருகிறது.  அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் படுக்கைகள் நிரம்பி வருகின்றன. நோயினால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களுக்கு ஆக்சிஜன் செலுத்தி சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் மும்பை, டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. இதனால் ஏராளமானோர் உயிரிழந்து வருகிறார்கள். இதனை தடுக்க பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு மத்திய அரசு உடனடியாக ஆக்சிஜனை அனுப்பி வருகிறது.

அந்த வகையில் மகராஷ்டிர மாநிலத்துக்கு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ரயிலில் ஆக்சிஜன் அனுப்பப்படுகிறது. ஆக்சிஜன் டேங்கருடன் கூடிய லாரிகளை விசே‌ஷ சரக்கு ரயிலில் நேரடியாக ஏற்றி அதன் மூலம் கொண்டு செல்கிறார்கள்.  இதே போல ஜார்க்கண்ட் மாநிலம் போகோராவில் இருந்தும் ஒரு ரயில் புறப்படுகிறது. அந்த ரயிலில் வரும் ஆக்சிஜன் உத்தரபிரதேச மாநிலத்துக்கு சப்ளை செய்யப்படுகிறது.  இதற்காக லக்னோவில் இருந்து டேங்கர் லாரிகளுடன் விசே‌ஷ ரயிலை பகோராவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவை ஆக்சிஜனை ஏற்றிக் கொண்டு வாரணாசி வழியாக உத்தரபிரதேசத்துக்கு வருகிறது. பின்னர் அவை பல்வேறு இடங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது.  ஆக்சிஜன் டேங்கர் லாரிகளை சாலை வழியாக அனுப்பி வைத்தால் தாமதம் ஆகும் என்பதற்காக ரயிலில் அனுப்புகின்றனர். இந்த ரயில்கள் 62 கி.மீ. வேகத்தில் பயணம் செய்து குறிப்பிட்ட இலக்குகளை அடையும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 19 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 19 hours ago
View all comments

வாசகர் கருத்து