முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் தேவைகளை பூர்த்தி செய்வதில் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட பிரதமர் அறிவுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 23 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் தேவைகளை பூர்த்தி செய்வதில் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்று மாநில முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை மேற்கொண்டார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். 

இந்தியா முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவு கொரோனா தொற்று பரவலானது அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க முடியாமல் மருத்துவமனைகள் திண்டாடி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் மருத்துவ ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளது.  கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, வார இறுதி பொது முடக்கம், மக்கள் இயங்குவதற்கு தடை என பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் நடந்த உயர்மட்டக்குழு ஆலோசனையின்போது, ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரித்து, மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும்படி பிரதமர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார்.  தமிழகம் சார்பில் தலைமைச் செயலாளர்  ராஜீவ் ரஞ்சன் பங்கேற்றார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம், வைரஸ் பரவலை தடுக்கும் வழிமுறைகள், ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவ வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும். மத்திய சுகாதார அமைச்சகம் அவ்வப்போது ஆலோசனை வழங்குகிறது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் நிலைமை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் தேவைகளை பூர்த்தி செய்வதில் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். அனைவரும் ஒரே நாட்டினர் என்ற நோக்கில் இணைந்து பணியாற்றினால் வளங்களுக்கு பற்றாக்குறை ஏற்படாது.  மாநிலங்களுக்கு ஆக்சிஜன் டேங்கர்கள் விரைந்து சென்றடைய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். மருத்துவ ஆக்சிஜன் விநியோகத்தில் ரயில்வே மற்றம் விமானப்படை ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மாநிலங்கள், பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புவதை தடுக்கக்கூடாது.  மத்திய அரசிடம் இருந்து ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன், மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் உடனடியாக தேவைக்கேற்ப ஆக்சிஜன் வழங்குவதை ஒருங்கிணைப்புக் குழு உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் பேசினார்.

 இதேபோல் மதியம் 12.30 மணியளவில் ஆக்சிஜன் உற்பத்தியாளர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். அப்போது ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரித்து, தேவைப்படும் அளவிற்கு சப்ளை செய்யும்படி பிரதமர் கேட்டுக்கொண்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து