முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை அரசாளும் மீனாட்சிக்கு இன்று திருக்கல்யாண வைபவம்: மணம் முடித்த பின் பக்தர்கள் தரிசிக்கலாம்

வெள்ளிக்கிழமை, 23 ஏப்ரல் 2021      ஆன்மிகம்
Image Unavailable

கொரோனா பரவல் 2-வது அலை காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, உள்திருவிழாவாக நடந்து வருகிறது. விழாவின் 8-ம் நாளான நேற்று முன்தினம் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடந்தது. இதையொட்டி காலையில் மீனாட்சி-சுந்தரேசுவரர் தங்க பல்லாக்கில் எழுந்தருளி ஆடி வீதிகளை வலம் வந்தனர்.  மீனாட்சி பட்டாபிஷேகம் இரவு 8.05 மணிக்கு மேல் 8.29 மணிக்குள் அம்மன் சன்னதியில் உள்ள 6 கால் பீடத்தில் நடந்தது.  அப்போது மீனாட்சிக்கு ராயர் கிரீடம் சூட்டி, நவரத்தினத்தால் ஆன செங்கோல் வழங்கி, பட்டத்து அரசியாக பட்டாபிஷேகம் சூட்டப்பட்டது.  அதன் பின்னர் மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக பூப்பல்லக்கில் எழுந்தருளி ஆடி வீதியை வலம் வந்தார். 

அதை தொடர்ந்து நேற்று சிவபெருமானாகிய சுந்தரேசுவரரை போருக்கு மீனாட்சி அழைக்கும் திக்கு விஜயம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் முத்தாய்ப்பாக மீனாட்சி திருக்கல்யாணம் இன்று 24-ம் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. இன்று காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.திருக்கல்யாணத்தைக் காண பக்தர்களுக்கு அனுமதியில்லை. 

திருக்கல்யாணம் முடிந்த பிறகு தம்பதி சமேதராக காட்சி அளிக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். மல்லிகை, ரோஜா, மனோரஞ்சித, பன்னீர்ப் பூக்கள் வாசம் மணக்க தம்பதி சமேதரராக காட்சி அளிக்கும் மீனாட்சி சுந்தரரேஸ்வரரைக் காண பக்தர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பக்தர்கள் பங்கேற்பின்றி திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் நேரில் சாமி தரிசனம் செய்ய முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவல் இருப்பதால் இந்த முறையும் தேரோட்டம் நடைபெறாது. இதனால் பக்தர்கள் மிகுந்த வேதனையில் மூழ்கியுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து