எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படுகின்ற பயணிகள் சிறப்பு ரயில் இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
முழு ஊரடங்கு இன்று அமல்படுத்தப்படுவதால் மின்சார ரயில் சேவை குறைக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் செல்லக்கூடிய அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் வழக்கம் போல இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில் சேவை இன்று குறைக்கப்பட்டுள்ளது.
இது தவிர 16 பயணிகள் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படுகின்ற பயணிகள் சிறப்பு ரயில் இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
எழும்பூர் - புதுச்சேரி, திருச்சி - கரூர், திருச்சி - காரைக்கால், விழுப்புரம் - மதுரை ஆகிய பகுதிகளுக்கு இடையே இயக்கப்படுகின்ற பயணிகள் ரயில்கள் இரு மார்க்கமும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்யக்கூடிய சிறப்பு ரயில்களாக இதுவரையில் இயக்கப்பட்டு வந்தது.
கொல்லம் - ஆழப்புழா, ஆழப்புழா - கொல்லம், எர்ணாகுளம் -ஆழப்புழா, ஆழப்புழா - எர்ணாகுளம், அரக்கோணம், ஜோலார்பேட்டை - காட்பாடி, காட்பாடி - ஜோலார்பேட்டை உள்ளிட்ட 16 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


