முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கான பயணிகள் விமான போக்குவரத்துக்கு குவைத் தடை

சனிக்கிழமை, 24 ஏப்ரல் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

குவைத் : இந்தியாவுக்கான பயணிகள் விமானப் போக்குவரத்தை நிறுத்தி வைப்பதாக குவைத் அறிவித்துள்ளது.

அதிகரித்து வரும் கொரோனா வைரஸைக் கருத்தில் கொண்டு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இந்தியாவிலிருந்து யாரும் வருவதற்கு  தடை விதித்துள்ளன.

இந்தியா, பாகிஸ்தானிலிருந்து பயணிகள் விமானம் அடுத்த 30 நாட்களுக்கு வருவதற்குத் தடை விதித்து கனடா அரசும் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு கடந்த வியாழன் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக கனடா அரசு பிறப்பித்த நீண்ட நாட்கள் தடையாக இது அமைந்துள்ளது. அதேசமயம், சரக்கு விமானப் போக்குவரத்துக்கு எந்தத் தடையையும் கனடா அரசு விதிக்கவில்லை. 

இந்த நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை இந்தியாவுக்கான விமானப் போக்குவரத்தை நிறுத்தி வைப்பதாக குவைத் அறிவித்துள்ளது.  இந்தியாவில் இருந்து நேரடியாகவோ அல்லது வேறு நாடுகளின் வழியாகவோ வரும் அனைத்து விமானப் பயணிகளுக்கும் தடை விதிப்பதாகவும் குவைத் விமானப் போக்குவரத்து இயக்ககம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

அதே நேரம் இந்தியாவுக்கு வெளியே தொடர்ந்து 14 நாட்கள் தங்கியவர்கள் உரிய சோதனைகளுக்குப் பின்பு குவைத்திற்கு வர தடையில்லை. குவைத் குடிமக்கள் மற்றும் அவர்களின் பணியாளர்கள் வரவும் தடை இல்லை. விமான சரக்கு போக்குவரத்துக்கு இந்த தடை பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து