எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லக்னோ : உத்தர பிரதேசத்தில் எந்த மருத்துவமனையிலும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு இல்லை என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது. மராட்டியம் உத்தரப்பிரதேசம், டெல்லி மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மிகக் கடுமையான அளவில் உள்ளது.
இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வருகின்றன. பல மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் பற்றாக்குறையும், தடுப்பூசித் தட்டுப்பாடும் இருந்து வருகிறது.
இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் எந்த மருத்துவமனையிலும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு இல்லை என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இது குறித்து யோகி ஆதித்யநாத் கூறுகையில், உத்தரபிரதேசத்தில் எந்த தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை என்பதே கிடையாது.
தற்போது பிரச்சினை என்னவென்றால், ஆக்சிஜனை பதுக்குவதும், கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதும்தான், அதை இரும்புக்கரம் கொண்டு முடிவுக்கு கொண்டு வருவோம். முதல் அலையோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கொரோனா 2-வது அலையில் பாதிப்பு 30 மடங்கு அதிகரித்துள்ளது என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


