முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்தில் இருந்து 495 ஆக்சிஜன் உற்பத்தி எந்திரங்கள் வருகின்றன - அமெரிக்காவும் கருவிகளை அனுப்புகிறது

திங்கட்கிழமை, 26 ஏப்ரல் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

லண்டன் : இந்தியாவில் கொரோனா பரவல் மோசமான நிலையில் இருப்பதால் அதை கட்டுப்படுத்துவதற்கு சர்வதேச நாடுகளும் உதவ முன்வந்துள்ளன.

தற்போது ஆக்சிஜன், வெண்டிலேட்டர் கருவிகள், மருத்துவ சாதனங்கள் தேவை அதிகமாக இருக்கிறது. இவற்றை வழங்குவதற்கு பல நாடுகளும் முன்வந்துள்ளன.

இதில் இங்கிலாந்து 495 ஆக்சிஜன் உற்பத்தி எந்திரங்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிறது. மேலும் 120 வெண்டிலேட்டர் கருவி, 2 பிரதான வெண்டிலேட்டர் கருவிகள், 60 மருத்துவ சாதனங்கள் மற்றும் பல்வேறு கருவிகள், சிகிச்சை உதவி சாதனங்களை அனுப்பி வைக்கிறது.

இவை 9 விமானங்களில் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதன் முதல் பகுதி இன்று இந்தியா வந்து சேர்கிறது.

இதேபோல ஜெர்மனி இந்தியாவுக்கு அவசரகால உதவிகளை செய்வதற்கு தயாராக இருப்பதாக அதிபர் ஏஞ்சலா மார்கல் அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய யூனியன் கமி‌ஷனர் உர்சுலா வான் கூறும்போது, இந்தியாவில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை கட்டுப்படுத்த அனைத்து உதவிகளையும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் செய்யும் என்று கூறியுள்ளார்.

இதேபோல அமெரிக்காவும் இந்தியாவுக்கு ஏராளமான உதவிகளை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துக்கு பெருமளவு மூலப்பொருட்கள் அமெரிக்காவிடம் இருந்துதான் வருகின்றன. ஆனால் உள்நாட்டு தேவையை கருதி வெளிநாடுகளுக்கு இதுபோன்ற பொருட்கள் ஏற்றுமதிக்கு அமெரிக்கா தடை விதித்தது.

இதன் காரணமாக கோவி ஷீல்டு மருந்து தயாரிப்புக்கு மூலப்பொருள் கிடைக்காத நிலை உருவானது. இதனால் மருந்து உற்பத்தி பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. எனவே இந்த தடையை நீக்க வேண்டும் என்று கோவிஷீல்டு மருந்து தயாரிப்பு அதிபர் ஆதர்பூன வல்லா வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

இந்த நிலையில் இந்தியாவின் அவசர தேவைக்கு அமெரிக்காவில் உற்பத்தியாகும் பல்வேறு சாதனங்கள் தேவைப்பட்டன.

இது சம்பந்தமாக இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத்தோவல், அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையடுத்து கோவிஷீல்டு மருந்து தயாரிப்புக்கான மூலப்பொருட்களை அனுப்ப அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது. அத்துடன் பல்வேறு மருத்துவ சாதனங்களையும் அனுப்பவும் அமெரிக்கா சம்மதித்துள்ளது.

இதன்படி கொரோனா சிகிச்சை தெராபெட்டிக் கருவிகள், அதிவேக கொரோனா பரிசோதனை கருவிகள், வெண்டிலேட்டர், பெர்சனல் புரொடெக்டிவ் சாதனம் ஆகியவற்றை அமெரிக்கா அனுப்புகிறது. இத்துடன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் சாதனங்களும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

ஐதராபாத்தில் உள்ள பயோ-இ நிறுவனம் கொரோனா தடுப்பூசி மருந்தை உற்பத்தி செய்ய உள்ளது. இதற்கு அமெரிக்கா வளர்ச்சி நிதி அமைப்பு நிதிஉதவி செய்ய முன்வந்துள்ளது. இந்த நிறுவனம் 2022-ம் ஆண்டு வாக்கில் 100 கோடி தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்ய இருக்கிறது.

மேலும் தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் உதவிகள் வழங்குவதற்காக சிறப்பு குழுவையும் அமெ ரிக்கா உருவாக்கி உள்ளது.

அமெரிக்காவின் துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் இருந்து வருகிறார். அவர் இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாக கூறி இருக்கிறார்.

இந்திய அரசோடு நெருக்கமாக பணியாற்றி அவசர தேவைக்கான சாதனங்களையும், உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் என்று கூறியுள்ளார்.

இதேபோல ரஷியாவும் இந்தியாவுக்கு உதவிகள் செய்வதாக அறிவித்துள்ளது. இதன்படி 4 லட்சம் ரெம்டிசிவர் மருந்துகளை அனுப்புவதாக கூறி இருக்கிறது. இதற்கு அமெரிக்காவில் அனுமதி பெற வேண்டும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இத்துடன் ஆக்சிஜன் உற்பத்தி கருவிகள், மருந்துகள் போன்றவற்றை அனுப்பி வைப்பதாக அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து