முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா: வழக்கத்தை விட நாம் சிறப்பாக செயல்பட நேரம் வந்து விட்டது: பாதுகாப்பு படையினருக்கு ராவத் அழைப்பு

செவ்வாய்க்கிழமை, 27 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : ஒரு அசாதார சூழ்நிலையில் வழக்கத்தை விட சிறப்பாக செயல்பட நேரம் வந்து விட்டதாக பாதுகாப்பு படையினருக்கு முப்படைகளின் தலைமை தளபதி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 23 ஆயிரத்து 144 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 76 லட்சத்து 36 ஆயிரத்து 307 ஆக உள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 28 லட்சத்து 82 ஆயிரத்து 204 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. பல்வேறு வெளிநாடுகளும் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. 

இதற்கிடையில், நாட்டில் நிலவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய ஆயுதப்படையில் இருந்து உதவிகளை பெறுவது தொடர்பாக முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்துடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், சிவில் நிர்வாகத்திற்கு உதவ நேரம் வந்துவிட்டதாக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் நேற்று தெரிவித்தார். இது தொடர்பாக பிபின் ராவத் விடுத்துள்ள அறிவிப்பில், 

பாதுகாப்பு படையினர் ஒரு அசாதார சூழ்நிலையில் வழக்கத்தை விட சிறப்பாக செயல்படவும், சிவில் நிர்வாகத்திற்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு உதவவும் நேரம் வந்து விட்டது. இந்த சந்தர்ப்பத்தில் சரியான நேரத்திலான உதவி முக்கியமானது.  சீருடையில் இருக்கும் நமது ஆண்களுக்கும், பெண்களுக்கும் எப்போதுமே ஒவ்வொரு முறையும் தடைகளை உடைத்து எப்போதும் கூடுதல் தொலைவு செல்ல விருப்பமும் அர்ப்பணிப்பும் இருக்கிறது. நம்மால் முடியும், நாங்கள் செய்வோம். நாம் இன்னும் பயணிக்க நீண்ட தொலைவு உள்ளது என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து