எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : கொரோனா பரிசோதனை எண்ணிக்கைகள் குறைக்கப்பட்டுள்ளதாக மராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
மராட்டியத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. எனினும் கடந்த சில நாட்களாக மும்பையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சீராக குறைந்து வருகிறது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கையும் முன்பு போல உயர்ந்து கொண்டே செல்லாமல் சீராக இருந்து வருகிறது.
இந்த நிலையில், மராட்டியத்தில் கொரோனா பரிசோதனைகளை குறைத்ததே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவாக பாதிவாவதற்கு காரணம் என்று முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு தேவேந்திர பட்னாவிஸ் எழுதிய கடிதத்தில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும் தேவேந்திர பட்னாவிஸ் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
மும்பை உள்பட மாநிலத்தில் பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது தொற்று அபாயத்தை அதிகரித்துள்ளது. கொரோனாவால் ஏற்படும் மரண எண்ணிக்கையும் 20 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. பழைய ஆவணங்கள் அப்டேட் செய்யப்படவில்லை. கொரோனா குறித்த துல்லியமான தகவல்கள் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


