Idhayam Matrimony

இந்தியாவுக்கு ஆதரவாக துபாய் சாலைகளில் உள்ள டிஜிட்டல் விளம்பர பலகைகளில் வாசகம்

வெள்ளிக்கிழமை, 30 ஏப்ரல் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

துபாய் : கொரோனா பாதிப்பால் திணறி வரும் இந்தியாவுக்கு ஆதரவாக துபாய் சாலைகளில் உள்ள டிஜிட்டல் விளம்பர பலகைகளில் (#ஸ்டே ஸ்ட்ராங் இந்தியா) என வாசகம் எழுதப்பட்டுள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து கொரோனாவால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  இதில் பல்வேறு நாடுகளும் உதவி செய்வதாக அறிவித்த நிலையில் அமீரகமும் ஆக்சிஜன் சப்ளைக்கு உதவி வருகிறது.

இதனையடுத்து இரு நாடுகளுடன் இருந்து வரும் நல்லுறவு மற்றும் ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் கடந்த வாரம் துபாயில் உள்ள உலகின் உயரமான கட்டிடம் புர்ஜ் கலீபாவில் இந்திய தேசிய கொடி ஒளிரவிடப்பட்டது.

இதனை அடுத்து நேற்று முன்தினம் துபாயின் பிரதான ஷேக் ஜாயித் சாலையில் உள்ள டிஜிட்டல் விளம்பர பலகைகளில் #ஸ்டே ஸ்ட்ராங் இந்தியா என்ற ஹாஷ் டேக்குடன் எழுத்துகளும் ஒளிரவிடப்பட்டது. இந்தியாவை உறுதியுடன் இருங்கள் என அமீரகம் கூறுவதாக அந்த தகவல் அமைந்திருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து