Idhayam Matrimony

தடுப்பூசி போடுவதில் நலிவுற்றோருக்கு முன்னுரிமை அளிக்க உத்தரவிட வேண்டும் : பிரதமர் மோடிக்கு சத்தீஷ்கர் முதல்வர் கடிதம்

வெள்ளிக்கிழமை, 30 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

ராய்ப்பூர் : சமூக, பொருளாதார நலிவுற்ற நபர்களுக்கு கொரோனா தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்க உத்தரவிட கோரி பிரதமருக்கு சத்தீஷ்கார் முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

நாட்டில் நாள்தோறும் கொரோனா பாதிப்புகள் உச்சமடைந்து வருகின்றன.  கொரோனா பாதிப்புகளை தடுக்க இந்தியாவில் அவசரகால தேவைக்காக தடுப்பூசிகளை பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.  இதன்படி, கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் நாட்டில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில் மே 1-ம் தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடைய ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என அறிவித்தது. இதனால், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று தடுப்பூசிகளை போட்டு கொள்ள முடியும்.  எனினும், நாட்டில் தடுப்பூசிகள் பற்றாக்குறை என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. 

இதனை கவனத்தில் கொண்டு பிரதமர் மோடிக்கு சத்தீஷ்கார் முதல்வர் பூபேஷ் பாகல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.  

அதில், கொரோனா தடுப்பூசி போடுவதில் 18-44 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு முன்னுரிமை அளிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.  இதே போன்று, சமூக மற்றும் பொருளாதார நிலையில் நலிவுற்ற நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார். 

இந்த பிரிவில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் இடத்திலேயே பதிவு செய்து கொள்ளும் வசதியையும் ஏற்படுத்தி தரவேண்டும்.  ஆன்லைன் வழியே மட்டுமே பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தினால், ஒருவரும் ஏமாற்றம் அடையாமல் இருக்க இந்த வசதி உதவும் என்றும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து