எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : பாலிவுட்டின் மூத்த நடிகர் ரந்தீர் கபூருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் அவர், கோகிலாபென் அம்பானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொரோனா வைரசின் இரண்டாவது அலை நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பாலிவுட்டில் கடந்த சில வாரங்களில் மட்டும் நீல் நிதின் முகேஷ், சோனு சூத், மனிஷ் மல்ஹோத்ரா, கத்ரீனா கைப், அக்ஷய் குமார், கோவிந்தா, பரேஷ் ராவல், ஆலியா பட், ரன்பீர் கபூர், மற்றும் ரோஹித் சரப் உள்ளிட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதற்கு முன்னதாக, அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், அர்ஜுன் கபூர், மலாக்கா அரோரா மற்றும் சிலரும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், பாலிவுட் மூத்த நடிகர் ரந்தீர் கபூர் நேற்று முன்தினம் இரவு மும்பையில் உள்ள கோகிலாபென் அம்பானி மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான டாக்டர் சந்தோஷ் ஷெட்டி கூறுகையில்,
மூத்த நடிகர் ரந்தீர் கபூருக்கு (74) நேற்று முன்தினம் இரவு சுவாச பிரச்சினை ஏற்பட்டதால், கோகிலாபென் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. இருந்தும் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தீவிர சிகிச்சையில் கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


