முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகரிக்கும் கொரோனா தொற்று: மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 30 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். 

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையால் அதிகரிக்கும் நோயாளிகளை அனுமதிக்க முடியாமல் ஆஸ்பத்திரிகளும், பெருகி வரும் பிணங்களை எரிக்க முடியாமல் சுடுகாடுகளும் திணறி வருகின்றன. இதனால் வரலாறு காணாத துயரத்தை நாடு அனுபவித்து வருகிறது.  

இந்த சூழலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பிரதமர் மோடி தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இது தொடர்பாக பல்வேறு துறை சார்ந்தவர்களுடன் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தி, கொரோனாவை வென்றெடுப்பதற்கான வழிமுறைகளை மாநிலங்களுக்கும், சுகாதாரத் துறைக்கும் அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று அவர் தனது அமைச்சர்கள் குழுவினருடன் மெய்நிகர் முறையில் ஆலோசனை நடத்தினார்.  இதில் கொரோனாவால் நாடு சந்தித்து வரும் மோசமான சூழல் மற்றும் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. நாட்டில் கொரோனாவின் 2-வது அலை தொடங்கியபின் மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி நடத்தும் முதலாவது ஆலோசனை கூட்டம் இதுவாகும். 

இந்த கூட்டத்தில் நாட்டில் நிலைமையை சமாளிக்க அரசின் அனைத்து துறைகளும் ஒற்றுமையாகவும், விரைந்தும் செயல்படுகிறது. மேலும், அமைச்சர்கள் அந்தந்த பகுதி மக்களுடன் தொடர்பில் இருக்கவும், அவர்களுக்கு உதவவும், மக்களின் கருத்துகளை பெறவும் பிரதமர் கேட்டுக் கொண்டார். அதேபோல், உள்ளூர் மட்டத்தில் உள்ள பிரச்னைகள் உடனடியாக அடையாளம் காணப்பட்டு தீர்வு காணப்படுவதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து