எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பயன்பாட்டை கண்காணியுங்கள் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை தினமும் 3 லட்சத்துக்கு மேலாக அதிகரித்து வருகிறது. கொரோனா சிகிச்சையில் ஆக்சிஜன் முக்கிய பங்கு வகிக்கிறது. நோயாளிகள் எண்ணிக்கை பெருகும் போது, ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது. இதை சமாளிக்க பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதையொட்டி மத்திய சுகாதார துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால், டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் தொற்று நோய் தொடங்கியதில் இருந்து, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை மத்திய அரசு முக்கிய மருத்துவ தலையீடாக அடையாளம் கண்டது. ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 400 ஆக்சிஜன் சிலிண்டர்களை தேசிய அளவில் கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் மத்திய அரசு கொள்முதல் செய்தது.
ஏப்ரல் 21-ம் தேதியன்று ஒரு லட்சத்து 27 ஆயிரம் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு ஆர்டர் அளிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜனை விவேகத்துடன் பயன்படுத்துமாறு மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. மருத்துவ ரீதியில் தேவைப்படாதவர்களுக்கு ஆக்சிஜன் செலுத்துவதை நிறுத்த வேண்டும். தனியார் ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் ஆக்சிஜன் பயன்பாட்டை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


