முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா விதிமுறைகள் காரணமாக முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும் : தலைமை தேர்தல் ஆணையர் சாகு தகவல்

சனிக்கிழமை, 1 மே 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட உள்ளன. இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கொரோனா தொற்று காரணமாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 6 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்கு எண்ணிக்கை மையங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படும். இடைப்பட்ட நேரத்தில் வாக்கும் எண்ணும் பணிகள் நிறுத்தி வைக்கப்படும்.  கொரோனா விதிமுறைகள் காரணமாக முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும்.

ஒரு சுற்றுக்கு 500 தபால் வாக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு எண்ணப்படும்.  தமிழகம் முழுவதும் இருந்து நேற்று முன்தினம் வரை 5,64,253 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு பணிகளில் 35,836 காவலர்கள் ஈடுபடவுள்ளனர் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து