முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இதுவரை 15.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது: மத்திய சுகாதார துறை தகவல்

சனிக்கிழமை, 1 மே 2021      இந்தியா
Image Unavailable

இந்தியாவில் இதுவரை 15.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது, காட்டுத்தீ போல கட்டுக்கடங்காமல் தொடர்ந்து பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றின் இந்த இரண்டாவது அலையானது, இளம் வயதினரை அதிகளவில் குறிவைத்து தாக்குகிறது. ஒருபக்கம் கொரோனாவை விரட்ட நாட்டில் இதுவரை 15.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், 

கொரோனா தொற்றுக்கு எதிரான, உலகின் மாபெரும் தடுப்பூசி போடும் திட்டத்தில் இந்தியாவில் இதுவரை 15,49,89,635 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 27 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டன. 105-வது நாளான நேற்று முன்தினம் (ஏப்ரல் 30), நாடு முழுவதும் 27,44,485 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,56,84,406 ஆக (81.84 சதவீதம்) நேற்று பதிவாகியுள்ளது.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து