முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவை எதிர்கொள்ள தெற்கு ரயில்வே ஏற்பாடு: 299 ரயில் பெட்டிகளில் 4794 படுக்கைகள் தயார்

ஞாயிற்றுக்கிழமை, 2 மே 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : திருவனந்தபுரம், எர்ணாகுளம், பாலக்காடு, ஷோரணூர் ஆகிய டிவி‌ஷன்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க ரயில் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது. நாளுக்கு நாள் தொற்று தீவிரம் அடைவதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வருகிறார்கள். ஒரு சில மாவட்டங்களில் மருத்துவமனைகளில் இடம் இல்லாத நிலையும் ஏற்பட்டு உள்ளது. ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் கொரோனா மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.  தொற்று பாதிப்பு இன்னும் அதிகரிக்க கூடும் என்பதால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிக்கப்படுகிறது.

இந்த நிலையில், தெற்கு ரயில்வே மூலம் ரயில் பெட்டிகள் சிகிச்சை அளிக்கும் மருத்துவ மையமாக மாற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போது 500 ரயில் பெட்டிகள் சிகிச்சைக்காக தயார்படுத்தப்பட்டு இருந்தன.  பின்னர் அவற்றில் சில பெட்டிகள் பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. இதனால் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. 299 ரயில் பெட்டிகள் தற்போது கையிருப்பில் உள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

சென்னை, கோவை, சேலம், மதுரை, திருச்சி, திருவனந்தபுரம், எர்ணாகுளம், பாலக்காடு, ஷோரணூர் ஆகிய டிவி‌ஷன்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க ரயில் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளன. 299 ரயில் பெட்டிகளில் 4,794 படுக்கைகள் தயார் படுத்தப்பட்டுள்ளது. ஒரு பெட்டியில் 8 படுக்கைகள் வீதம் அமைக்கப்பட்டுள்ளன. எந்த ரயில் நிலையத்திற்கு அவற்றை கொண்டு வர வேண்டும் என்று அரசு தெரிவிக்கிறதோ அங்கு கொண்டு சென்று நிறுத்து வதற்கு தயாராக இருக்கிறோம். ரயில் பெட்டிகளில் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடிய அடிப்படையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து