முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடும் வயிற்று வலி: பஞ்சாப் வீரர் கே.எல்.ராகுல் மருத்துவமனையில் அனுமதி

ஞாயிற்றுக்கிழமை, 2 மே 2021      விளையாட்டு
Image Unavailable

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனும் இந்திய அணியின் முக்கியமான வீரருமான கே.எல்.ராகுலுக்கு திடீரென கடும் வயிற்று வலி ஏற்பட்டது, இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு குடல்வால் அழற்சி எனும் ‘அப்பெண்டிசைட்டிஸ்’ இருப்பது சோதனையில் தெரியவந்ததையடுத்து உடனடியாக அறுவை சிகிச்சை தேவைப்படுவதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பஞ்சாப் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ள செய்தியில், “நேற்று (நேற்று முன்தினம்) இரவு கே.எல்.ராகுல் வயிற்று வலியால் துடித்தார். மருந்துகள் கொடுத்தும் சரியாகவில்லை. அவரை உடனே எமர்ஜென்சி அறைக்கு அழைத்து சென்று சோதனைகள் செய்ததில் அவருக்கு திடீரென குடல்வால் அழற்சி அதாவது அப்பெண்டிசைட்டிஸ் இருப்பது தெரியவந்தது. இதனை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்ற முடியும் அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று கூறியுள்ளது.

நேற்று அகமதாபாத்தில் இரவு ஆட்டத்தில் கிங்ஸ் பஞ்சாப் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த நிலையில் அவருக்கு இப்படி ஒரு அப்பெண்டிசைட்டிஸ் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஐ.பி.எல் தொடரில் கே.எல்.ராகுல் 7 போட்டிகளில் 331 ரன்களுடன் முதலிடம் வகிக்கிறார், ஆரஞ்சு தொப்பிக்கு சொந்தக்காரராகத் திகழ்ந்தார்.

அன்று 57 பந்துகளில் 91 ரன்கள் விளாசி தன் மந்தமான பேட்டிங் குறித்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கே.எல்.ராகுல்., இந்நிலையில் அவர் அறுவை சிகிச்சை முடிந்து உடனேயெல்லாம் ஆட முடியாது, எனவே இந்த ஐ.பி.எல் தொடர் அவரைப்பொறுத்தவரை முடிந்து விட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அதுபற்றியெல்லாம் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை. பஞ்சாப் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் 3-ல் வென்று 6 புள்ளிகளுடன் 5ம் இடத்தில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து