எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் - ஒத்துழைப்பும் தேவை என்றும், ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம் என்றும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. தனிப் பெரும்பான்மையாக வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி அமைக்க உள்ளது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க கூட்டணி 74 இடங்களில் மட்டுமே வென்றது. இதை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ராஜினாமா கடிதத்தை கவர்னருக்கு அனுப்பியுள்ளார்.
இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் “தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலிக்கு என்னுடைய நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த ஸ்டாலின் “எடப்பாடி பழனிசாமிக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை! ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம்” என பதிவிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


