முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக சட்டமன்ற தேர்தலில் நோட்டாவை விட குறைந்த வாக்குகளை பெற்ற தே.மு.தி.க.

திங்கட்கிழமை, 3 மே 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.ம.மு.கவுடன் கூட்டணி அமைத்த தே.மு.தி.க படு தோல்வியை சந்தித்துள்ளது. நோட்டாவைக் காட்டிலும் குறைந்த வாக்கு சதவிகிதத்தை தே.மு.தி.க இந்தத் தேர்தலில் பெற்றுள்ளது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.கவுடன் சேர்ந்து தே.மு.தி.க களம் கண்டது. 60 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக தே.மு.தி.க தலைவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற விருத்தாசலத்தில், முதல் முறையாக களமிறங்கிய தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், டெபாசிட் இழந்துள்ளார். இதே போல மற்ற பல தே.மு.தி.க வேட்பாளர்களும் டெபாசிட் இழந்து, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தே.மு.தி.க இந்தத் தேர்தலில் கடும் தோல்வியை சந்தித்துள்ளது. மேலும் கடந்த தேர்தல்களை விட இந்தத் தேர்தலில் தே.மு.தி.கவின் வாக்கு பூஜ்ஜியம் புள்ளி நான்கு விழுக்காடாக சரிந்துள்ளது.

2005-ம் ஆண்டு தே.மு.தி.க தொடங்கப்பட்ட பின்னர், 2006-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத்தேர்தலில் தே.மு.தி.க தனித்துக் களம் கண்டது. அப்போது விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு விஜயகாந்த் வெற்றி பெற்றார். மற்ற தொகுதிகளில் வெற்றி கைகூடாவிட்டாலும், போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே 8.4விழுக்காடு வாக்குகளை தே.மு.தி.க பெற்றது. இதையடுத்து நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் தனித்துக் களம் கண்ட தே.மு.தி.க வெற்றியடையாவிட்டாலும், 10 விழுக்காடு வாக்குகளைப் பெற்று பெரிய கட்சிகளை திரும்பிப் பார்க்க வைத்தது.

இதனால் 2011-ல் தே.மு.தி.கவை கூட்டணிக்கு கொண்டு வந்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அப்போது 29 தொகுதிகளில் வெற்றி பெற்ற தே.மு.தி.க, 7.9விழுக்காடு வாக்குகளைப் பெற்றது. இதையடுத்து, 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க, பாமகவுடன் தே.மு.தி.க களம் கண்டதில் வெற்றி கிடைக்கவில்லை. அதே நேரத்தில் வாக்கு சதவிகிதமும் 5.1 விழுக்காடாகக் குறைந்தது.

இதையடுத்து 2016 -ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நலக்கூட்டணியில் அங்கம் வகித்துப் போட்டியிட்ட தே.மு.தி.கவின் வாக்கு விகிதம் 2.41 விழுக்காடாக குறைந்தது. பின்னர் 2019 மக்களவைத் தேர்தலில் 2.19 சதவிகிதமாகக் குறைந்த தே.மு.தி.கவின் வாக்கு சதவிகிதம், தற்போது நடந்து முடிந்த தேர்தலில் 0.43சதவிகிதமாக கடும் சரிவை சந்தித்துள்ளது. அதிலும், நோட்டாவைக் காட்டிலும் தே.மு.தி.க குறைந்த அளவிலான வாக்குகளையே பெற்றுள்ளது.

தனித்துப் போட்டியிட்ட போது செல்வாக்குடன் இருந்த தே.மு.தி.க, கூட்டணி சேர்ந்தவுடன் அதன் வாக்கு சதவிகிதம் குறையத் தொடங்கியது. விஜயகாந்தின் உடல் நலக்குறைவும் இந்தத் தேர்தலில் தோல்வியடைந்ததற்கு முக்கியமாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், காலம் கடந்து கூட்டணி குறித்து முடிவெடுத்ததால், தொய்வான தேர்தல் முடிவுகள் வந்துள்ளதாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தனது அறிக்கையில் தேர்தல் முடிவு குறித்து குறிப்பிட்டுள்ளார். தே.மு.தி.கவின் வாக்கு சதவிகிதம் தொடர்ந்து குறைந்து வருவதால், அக்கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தே.மு.தி.க தனது முரசு சின்னத்தை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.

தே.மு.தி.க பெற்ற வாக்குகள்: 

1) 2006 - 8.4% 

2) 2009 - 10% 

3) 2011 - 7.9% 

4) 2014 - 5.1% 

5) 2016- 2.41% 

6) 2019 - 2.19% 

7) 2021 - 0.43%.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து