Idhayam Matrimony

வருண் சக்ரவர்த்தி உள்ளிட்ட இரு கொல்கத்தா வீரர்களுக்கு கொரோனா: ஐ.பி.எல் 30-வது லீக் ஆட்டம் ஒத்திவைப்பு

திங்கட்கிழமை, 3 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

அகமதாபாத் : வருண் சக்ரவர்த்தி உள்ளிட்ட இரு கொல்கத்தா வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நேற்று நடைபெறவிருந்த ஐ.பி.எல் தொடரின் 30-வது லீக் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

அகமதாபாத்தில் பெங்களூர் - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல் ஆட்டம் நேற்றிரவு நடைபெற இருந்தது. இந்நிலையில் கொல்கத்தா அணியில் விளையாடும் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.பி.எல் அமைப்பு அறிவித்தது.

இரு கொல்கத்தா வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு என்பதால் நேற்று நடைபெறவிருந்த பெங்களூர் - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கொரோனா பரிசோதனையில் மற்ற வீரர்களுக்கு கொரோனா இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. 

கொல்கத்தா அணி வீரர்களிடமிருந்து இரு வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மருத்துவக்குழு அவர்களுடைய உடல்நலத்தைக் கவனித்து வருகிறது. இதனால் கொல்கத்தா அணி வீரர்களுக்குத் தினமும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு யாராவது மேலும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு முன்கூட்டியே சிகிச்சை அளிக்கப்படும். இரு வீரர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் பரிசோதனை செய்யவுள்ளோம். வீரர்களின் பாதுகாப்பில் பி.சி.சி.ஐயும், கொல்கத்தா அணியும் அக்கறை கொண்டுள்ளோம் என ஐ.பி.எல் சார்பில் நேற்று வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து