Idhayam Matrimony

கொல்கத்தா வீரர்களை அடுத்து சென்னை அணியை சேர்ந்த மூன்று பேருக்கு கொரோனா

திங்கட்கிழமை, 3 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னை அணியை சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அச்சத்திற்கு மத்தியில் ஐ.பி.எல் 2021 தொடர் நடைபெற்று வருகிறது. இதனிடையே கொல்கத்தா வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் சர்மாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்ய்ப்பட்டுள்ளது.

இதனால் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலைியல் சென்னை அணியில் மூவருக்கு கொரோனா தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன், பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி மற்றும் சென்னை வீரர்கள் பயணம் செய்யும் பேருந்தின் கிளினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை வீரர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா மத்தியில் வீரர்களுக்கு உரிய பாதுகாப்புடன் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் அணி வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரவி வருவதால் ஐ.பி.எல் தொடர் முழுமையாக நடைபெறுமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து