முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல்.லில் பங்கேற்ற விவகாரம்: ட்விட்டர் பயனர்கள் விமர்சனத்திற்கு வர்ணனையாளர் ஸ்லாட்டர் பதிலடி

செவ்வாய்க்கிழமை, 4 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : ஐ.பி.எல்.லில் பங்கேற்ற விவகாரம் தொடர்பாக தன்னை விமர்சனம் செய்த ட்விட்டர் பயனர்களுக்கு ஆஸி. வர்ணனையாளர் ஸ்லாட்டர் பதிலடி கொடுத்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நடப்பு ஐ.பி.எல் தொடரில் வர்ணனையாளராக பணியாற்றிக் கொண்டிருந்த ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் நோய் தொற்று பாதிப்பு அச்சம் காரணமாக தொடரிலிருந்து பாதியிலேயே விலகி மாலத்தீவில் தஞ்சம் அடைந்துள்ளார். 

அதோடு இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் விமானங்களுக்கு ஆஸ்திரேலிய அரசு கொரோனா அச்சம் காரணமாக தடை விதித்துள்ளது. அதனால் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் தங்கள் நாட்டு அரசு தங்களுக்கு சிறப்பு விமானம் ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ‘அது முடியவே முடியாது’ என சொல்லி இருந்தார் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன். 

அதனை மேற்கோள் காட்டி பிரதமரின் முடிவை ட்விட்டர் தளத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார் மைக்கேல் ஸ்லாட்டர். ‘பணத்திற்கு ஆசைப்பட்டு உயிரை பணயம் வைத்து சென்றவர்கள் எல்லாம் இப்படி பேசக்கூடாது’ என விமர்சித்திருந்தனர் ட்விட்டர் பயனர்கள். 

அதற்கு மைக்கேல் ஸ்லாட்டர் தற்போது பதில் கொடுத்துள்ளார் “பணத்திற்காக என நினைப்பவர்களுக்காக. அந்த விமர்சனத்தை நான் உயிர் வாழ்வதற்காக வைத்திருந்தேன். தொடக்கத்திலேயே ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகி விட்டதால் ஒரு பைசா கூட நான் ஈட்டவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வசை பாடுவதை நிறுத்திவிட்டு இந்தியாவில் ஒவ்வொரு நாளும் உயிர் நீத்து கொண்டிருக்கும் மக்களை குறித்து சிந்தியுங்கள். அது தான் கரிசனம். அது எங்கள் அரசாங்கத்திற்கு இருக்க வேண்டும்!” என தன் மீதான விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார் மைக்கேல் ஸ்லாட்டர்.  

ஆஸி. பிரதமர் பதிலடி

ட்விட்டரில் ஆஸ்திரேலியாவின் பயணத்தடையை ‘அவமானம்’ என்று மைக்கேல் ஸ்லாட்டர் பதிவிட. இதற்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் ஸ்காட் மாரிசன் “இல்லை, நிச்சயமாக இது அபத்தம். அதிக ஆஸ்திரேலியர்களை பாதுகாப்பாக நாட்டுக்குக் கொண்டு வரத்தான் இந்த முடிவு. ஆஸ்திரேலியாவில் 3வது கொரோனா அலை பரவாமல் தடுக்கவே இந்தப் பயணத் தடை.

ஒவ்வொரு சிஸ்டத்திற்கும் இந்தக் காலக்கட்டம் அழுத்தம் தரக்கூடியதே, நான் நம் சிஸ்டத்தை உடைக்க தயாராக இல்லை. மாறாக சிஸ்டத்தைக் காப்பாற்ற நடவடிக்கை எடுப்பதே என் பணி. எனவே நான் அதிக ஆஸ்திரேலியர்களை தாய்நாடு திரும்பச் செய்ய வைக்க முடியும், நீண்ட காலத்துக்கு அவர்கள் பாதுகாப்பாக இருக்கவே இந்த ஏற்பாடு” என்று ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து