முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் விமானங்கள் இந்தியா வந்தன

வியாழக்கிழமை, 6 மே 2021      இந்தியா
Image Unavailable

பிரான்ஸ் நாட்டில் இருந்து புதிதாக 3 விமானங்கள் வந்ததன் மூலம் இந்திய விமானப்படையில் 20 ரபேல் ரக விமானங்கள் உள்ளன.

உலகில் அதிசக்தி வாய்ந்த போர் விமானங்களாக பிரான்ஸ் நாட்டு தயாரிப்பான ரபேல் விமானங்கள் உள்ளன.  இந்த விமானங்களை இந்தியா வாங்குவதற்கு முடிவு செய்தது. இதற்காக 36 விமானங்கள் ரூ.59,000 கோடி செலவில் வாங்குவதற்கு 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது.  அதைத் தொடர்ந்து படிப்படியாக விமானங்களை தயாரித்து பிரான்ஸ் நாடு இந்தியாவுக்கு அவற்றை அனுப்பி வருகிறது. 

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29-ம் தேதி, முதல் விமானம் இந்தியாவுக்கு வந்தது. அதைத்தொடர்ந்து இதுவரை 5 தடவை விமானங்கள் அங்கிருந்து அனுப்பப்பட்டுள்ளன.  அதன்படி 17 விமானங்கள் இதுவரை வந்துள்ளன.  இப்போது புதிதாக 3 விமானங்களை பிரான்ஸ் நாடு அனுப்பி வைத்தது. அந்த விமானங்கள் நேற்று முன்தினம் இரவு ஜாம் நகரை வந்தடைந்தன. வழியில் அந்த விமானங்களுக்கு ஐக்கிய அரபு நாட்டின் நடுவானில் பெட்ரோல் நிரப்பப்பட்டது. பின்னர் அவை ஜான் நகரை வந்தடைந்தன. அங்கிருந்து அம்பாலா படைப்பிரிவு கொண்டு செல்லப்படுகிறது. புதிதாக 3 விமானங்கள் வந்ததன் மூலம் இந்திய விமானப்படையில் 20 ரபேல் ரக விமானங்கள் உள்ளன. இந்த விமானங்கள் அம்பாலா படை பிரிவிலும் மேற்குவங்க பிரிவிலும் சேர்க்கப்படுகின்றன. மீதி உள்ள விமானங்களும் அடுத்தடுத்து வர உள்ளன.  இந்தியப் படையில் ரபேல் விமானங்கள் சேர்க்கப்பட்டது இந்தியப் படையின் சத்தியை பல மடங்கு அதிகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து