Idhayam Matrimony

அரசு மருத்துவமனை வளாகத்தில் 24 மணி நேர இலவச உணவுத் திட்டம் : அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 11 மே 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் ஊரடங்கு முடியும் வரையில் 24 மணி நேரமும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, 

முழு ஊரடங்கு காலத்தில் கொரோனா தொற்று காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தொற்றாளர்களுக்கும், அவர்களுக்கு உதவியாக இருப்பவர்களுக்கும் பிற நோய்களால் அங்கே அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கும், அவர்களைக் காண வருபவர்களுக்கும் 24 மணி நேரமும் உணவு வழங்க வேண்டும் என்று திட்டமிட்டோம்.  இதற்காக 94 மாதங்களாக மாதந்தோறும் ஒரு நாள் இலவச உணவு வழங்கி வரும் சங்கமித்ரா எனும் தனியார் அமைப்பினை தொடர்பு கொண்டு பேசினோம்.

ஊரடங்கில் 24 மணி நேரமும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இலவச உணவு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். எங்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தனியார் அமைப்பு, இலவச உணவை வழங்க முன்வந்தது. அதன்படி, 24 மணி நேரமும் இலவச உணவு வழங்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவமனையின் இயக்குனர் இருவரும் இணைந்து இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துள்ளனர் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து