Idhayam Matrimony

பிரதமர் மோடியுடன் பூடான் பிரதமர் தொலைபேசி மூலம் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 11 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பிரதமர் மோடியுடன் பூடான் பிரதமர் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கொரோனா தொற்றுக்கு எதிராக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைக்கு தனது ஆதரவை அவர் வெளிப்படுத்தினார்.

கொரோனா வைரசின் 2-வது அலையால் மிகக் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள இந்தியாவுக்கு சர்வதேச நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றன.  அந்த வகையில், இந்திய பிரதமர் மோடியுடன் நேற்று  தொலைபேசி வாயிலாக பேசிய பூடான் பிரதமர் லோடே ஷெரிங்,  கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.  

 நெருக்கடியான காலத்தில் இந்தியாவுக்கு ஆதரவு அளிப்பதற்காக பூடான் பிரதமருக்கும் பூடான் மக்களுக்கும் தனது நன்றியை பிரதமர் மோடி இந்த உரையாடலின் போது தெரிவித்துக் கொண்டார். அதே போல், பூடானில் கொரோனாவுக்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்கைகளையும் பிரதமர் மோடி பாராட்டியதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பூடானில் இதுவரை 1,241- பேர் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல், பூடானில் வயது வந்த மக்களில் 93 சதவீதம் பேருக்கு கடந்த மாதமே தடுப்பூசி போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து