எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கியதில் அரியானா முதல் இடத்தில் உள்ளது. 9-வது இடத்தில் தமிழகம் உள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை தடுக்க அவசரகால தேவைக்காக தடுப்பூசிகளை பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதன்படி, கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் நாட்டில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. உள்நாட்டில் உற்பத்தியான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகியவை இதற்கு அனுமதி அளிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டு உள்ள செய்தியில், மத்திய அரசு இதுவரை இலவச அடிப்படையில் 18 கோடி கொரோனா தடுப்பூசிகளை (17,93,57,860) மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கியுள்ளது. இவற்றில் வீணாக்கியது உள்பட 16 கோடியே 89 லட்சத்து 27 ஆயிரத்து 797 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இதுபோக 90 லட்சம் தடுப்பூசிகள் அவர்களிடம் இருப்பில் உள்ளன என தெரிவித்து உள்ளது.
கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கிய வகையில் அரியானா மாநிலம் முதல் இடம் பிடித்து உள்ளது. அரியானாவில் 6.49 சதவீதம் அளவுக்கு கொரோனா தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து அசாம் (5.92 சதவீதம்) 2-வது இடத்தில் உள்ளது. 3-வது இடத்தில் ராஜஸ்தான் (5.68 சதவீதம்) உள்ளது.
இந்த பட்டியலில் மேகாலயா (5.92 சதவீதம்) 4-வது இடத்திலும், பீகார் (5.20 சதவீதம்) 5-வது இடத்திலும், மணிப்பூர் (5.19 சதவீதம்) 6-வது இடத்திலும், பஞ்சாப் (4.94 சதவீதம்) 7-வது இடத்திலும், தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலி (4.5 சதவீதம்) 8-வது இடத்திலும் உள்ளன. கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கியதில் 9-வது இடத்தில் தமிழகம் உள்ளது. 10-வது இடத்தில் நாகலாந்து உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


