முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாறன் படத்திற்கு மீண்டும் தடை.

வியாழக்கிழமை, 20 மே 2021      சினிமா
Image Unavailable

Source: provided

திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் முதன்முறையாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இசையமைத்து, இயக்கியுள்ள படம் "ஆன்டி இண்டியன்". கடந்த ஏப்ரல் மாதம் இப்படத்தை  பார்த்த சென்சார் குழுவினர், படத்திற்க்கு தடை விதித்தனர். பின்னர்  மறு தணிக்கைக்கு இப்படம் அனுப்பப்பட்டது. பெங்களூரில் பிரபல இயக்குநர் நாகபரணா தலைமையில் பத்து பேர் கொண்ட குழுவினர் இப் படத்தைப் பார்த்தனர்.

இந்தப்படம் கண்டிப்பாக வெளியே வரவேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். அதேநேரம் நாங்கள் சொல்லும் சில காட்சிகள் மற்றும் வசனங்கள் நீக்க அல்லது ம்யூட் செய்யவேண்டும் என்றனர். அதிலும் குறிப்பாக "ஆன்டி இண்டியன்" எனும் டைட்டிலை மாற்ற வேண்டும் என்றனர்.

மேலும், நாங்கள் தரும் 38 கட்டுகளையும் ஏற்றுக்கொண்டு, படத்தில் அவற்றை எடிட் செய்து மறு தணிக்கைக்கு உட்பட்டால் U/A சான்றிதழ் தருகிறோம்' என்று கூறினர் ரிவைசிங் கமிட்டியினர். இதை ஏற்க மறுத்த படக்குழுவினர், ரீ ரிவைசிங் கமிட்டி அல்லது கோர்ட்டில் மேல் முறையீடு செய்யவிருப்பதாகவும்

அங்கே சாதகமான தீர்ப்பு வரும் எனும் நம்பிக்கையில் இருப்பதாகவும் "மூன் பிக்சர்ஸ்"- தயாரிப்பாளர் ஆதம் பாவா கூறினார். மேலும், சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் மோஷன் போஸ்டர் 'தமிழ் டாக்கீஸ்' யூ ட்யூப் சேனலில் வெளியாகி  பலரையும் ஈர்த்துள்ளது குறிப்பிடதக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து