எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் குடிசையில் வாழும் பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ.வுக்கு உணவும் வழங்கி பாதுகாப்பையும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் வழங்கி வருகின்றனர்.
மேற்கு வங்காளத்தின் சால்டோரா தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சந்தான பவுரி. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரை விட 4,145 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மேற்குவங்காளத்தில் நடைபெறும் வன்முறையால் அங்குள்ள பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் மத்திய பாதுகாப்புபடை வழங்கப்பட்டு உள்ளது . தனது கட்சியின் முடிவுக்கு எம்.எல்.ஏ சந்தனாவும் கட்டுப்பட்டு உள்ளார். தினசரி கூலித்தொழிலாளியின் மனைவியான எம்.எல்.ஏ. சந்தனா. தனது பாதுகாப்புக்காக அனுப்பப்பட்ட நான்கு மத்திய படை வீரர்களுக்கு தினசரி உணவு அல்லது அவர்களுக்கு தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியவில்லை. எம்.எல்.ஏ.வின் கணவரும், அவரது இரண்டு குழந்தைகளும் பாழடைந்த ஒற்றை அறை குடிசையில் தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி கூட இல்லாமல் வசித்து வருகின்றனர்.
ஊரடங்கால் எம்.எல்.ஏவின் கணவருக்கும் வேலை இல்லை. இதனால் பாதுகாப்பு பணிக்கு சென்ற மத்திய படை வீரர்கள் தங்கள் சொந்த பணத்தை போட்டு உள்ளூர் மளிகைப் பொருட்களிலிருந்து காய்கறிகளை வாங்கி எம்.எல்.ஏவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உணவு வழங்கி வருகின்றனர். என் கணவர் ஒரு கூலித்தொழிலாளி . எங்கள் தினசரி சராசரி வருமானம் ரூ .400 ஆகும். ஊரடங்கால் வருமானம் இல்லை என்று எம்.எல்.ஏ. கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


