எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நியூயார்க் : அமெரிக்காவின் பைசர் நிறுவனம் 6 மாத கைக்குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் பரிசோதனையை தொடங்கி உள்ளது.
பைசர் மருந்து நிறுவனம் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த பயோ என்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி, அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் 12 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு அளிக்கப்படுவதைப் போலவே, இந்த வயது சிறுவர்களுக்கும் தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் செலுத்தப்படுகின்றன.
இந்நிலையில், பைசர் நிறுவனம் 6 மாத கைக்குழந்தைகள் தொடங்கி, 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கான தடுப்பூசி பரிசோதனையைத் தொடங்கியிருக்கிறது. அமெரிக்கா, பின்லாந்து, போலந்து, ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த 4,500 சிறுவர்களிடம் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. 5 முதல் 11 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் 10 மைக்ரோகிராம் அளவும், 6 மாதம் முதல் 5 வயது குழந்தைகளுக்கு 3 மைக்ரோகிராம் அளவும் மருந்து கொடுக்கப்படுகிறது. இதன் முடிவுகள் செப்டம்பர் மாதத்தில் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் இதுவரை 12 முதல் 18 வயதுக்கு உட்பட்ட 70 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு, இங்கேயே பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை தயாரித்து செலுத்துவது குறித்து மத்திய அரசு அந்நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


