முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடுப்பூசியை வீணடித்ததில் ஜார்க்கண்ட் முதலிடம்: கேரளம், மே.வங்கத்திற்கு பாராட்டு

வியாழக்கிழமை, 10 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : நாட்டில் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவதுதான் ஒரே ஒரு தீர்வு. ஆனால் பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறையால், தடுப்பூசி திட்டம் தொய்வடைந்து உள்ளது. 

இந்த நிலையில், மாநில அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டது மற்றும் வீணடிக்கப்பட்ட அளவு குறித்த புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன் படி, கடந்த மே மாதத்தில் கேரளாவும், மேற்கு வங்கமும் தடுப்பூசி மருந்துகளை வீணடிக்காமல், முழுவதுமாக பயன்படுத்தி உள்ளன. கேரளாவும், மேற்கு வங்கமும் முறையே 1.10 லட்சம் மற்றும் 1.61 லட்சம் தடுப்பூசிகளை முழுவதும் பயன்படுத்தி, சுகாதாரத் துறையின் பாராட்டுகளைப் பெற்றுள்ளன.

ஆனால், நாட்டிலேயே ஜார்க்கண்ட் மாநிலம் 33.95 சதவீதம் அளவுக்கு தடுப்பூசிகளை வீணடித்து, தடுப்பூசி மருந்து வீணடிப்பதில் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கடுத்து, சத்தீஸ்கர் 15.79 சதவீதமும், மத்தியப் பிரதேசம் 7.35 சதவீத மருந்தையும் வீணடித்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து