Idhayam Matrimony

2-ம் தவணையாக ரூ. 2,000 - மளிகை பொருட்கள்: வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது: ரேசன்கடைகளில் 15-ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம்

வெள்ளிக்கிழமை, 11 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனா நிவாரண நிதியின் இரண்டாம் தவணை ரூ. 2,000 மற்றும் நிவாரணப் பொருள்களுக்கு டோக்கன் வழங்கும் பணிகள் நேற்று தொடங்கியுள்ளது.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் கொரோனா நிவாரண நிதியாக ரூ. 4,000 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, முதல்வராக  மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.  அதன்படி, மே மாதத்தில் முதல் தவணையாக ரூ. 2,000 வழங்கப்பட்டது. இரண்டாம் தவணை ரூ. 2,000 மற்றும் 14 வகை மளிகைப் பொருள்களுக்கு ஜூன் 15-ம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான டோக்கன் வழங்கும் பணிகள் மாநிலம் முழுவதும் நேற்று தொடங்கின.

இந்த டோக்கன்கள் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட உள்ளது. நியாய விலைக் கடைகளில் கூட்ட நெரிசல் இல்லாமல் மளிகைப் பொருள் தொகுப்பு மற்றும் நிவாரண நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு வசதியாக காலை 8 முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரையிலும் ரேசன் கடைகள் செயல்பட உள்ளன. 

ஏற்கெனவே, முதல் கட்டமாக கொரோனா நிவாரணத் தொகையாக ரூ.2,000 வழங்கப்பட்டது. இந்தத் தொகையை சுமாா் 2.07 கோடி பேர் பெற்றுள்ளனர். இந்த நிலையில், இரண்டாவது தவணையாக கொரோனா நிவாரணத் தொகை அளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து