முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

வெள்ளிக்கிழமை, 11 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடுமுழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சங்கம் தியேட்டர் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார். சென்னை மேற்கு மாவட்ட தலைவர் ரஞ்சன்குமார் முன்னிலை வகித்தார். மாநில நிர்வாகிகள் கோபண்ணா, செல்வம், சிரஞ்சீவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அமைந்தகரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ரங்க பாஷ்யம், ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர். சென்னை மேற்கு மாவட்டத்தில் மொத்தம் 21 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சென்னை முழுவதும் மொத்தம் 142 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  

கரூரில் ஜோதிமணி எம்.பி. தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை வண்ணாரப்பேட்டையில் பெட்ரோல் நிலையம் முன்பு, இரு சக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  வைத்திலிங்கம் எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இதே போல் கர்நாடகம், பஞ்சாப்,  ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய  அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து