முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருவாயை விட மனித உயிர் மிக முக்கியமானது; டாஸ்மாக் திறப்பு முடிவை திரும்பப்பெற வேண்டும்: முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை

சனிக்கிழமை, 12 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : வருவாயை விட மனித உயிர் மிக முக்கியமானது என்பதால், டாஸ்மாக் கடைகள் திறப்பு முடிவினை திரும்பப் பெற வேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கொரோனா நோய்த் தொற்றுப் பரவலை மேலும் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழகத்தில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக ஒருபுறம் அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும் என்ற அறிவிப்பு கொரோனா நோய்த் தொற்றுப் பரவலை அதிகரிக்க வழிவகுக்கும். 

2020-ம் ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சராசரியாக 3,000 என்றிருந்த நிலையில், உயிரிழப்புகள் சராசரியாக 30 என்றிருந்த நிலையில், சென்னை பெருநகர காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர மற்றப் பகுதிகளில் 7-05-2020 முதல் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என்று ஜெயலலிதாவின் வழியில் நடைபெற்ற அ.தி.மு.க. அரசு அறிவித்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து , தி.மு.க. சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், இது கொரோனா பரவலை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும் என்றும், மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை திறக்கக்கூடாது என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது  27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும் என்ற அறிவிப்பினை தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார். இந்த முடிவு முறைதானா என்பதை முதல்வர் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அரசு வருவாயை விட மனித உயிர் மிக முக்கியமானது என்பதன் அடிப்படையில், 14-06-2021 முதல் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதிக்கப்படும் என்ற முடிவினை திரும்பப் பெறுமாறு தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து