எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லண்டன் : இலங்கைக்கு எதிரான டி-20 தொடரில் பங்கேற்கவுள்ள இங்கிலாந்து அணியில் 6 வருடத்திற்கு பிறகு கிறிஸ் வோக்ஸ் இடம்பிடித்துள்ளார்.
சுற்றுப் பயணம்
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி- 20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி ஜூன் 23-ம் தேதியும், 2-வது போட்டி ஜூன் 24-ம் தேதியும் கார்டிஃபில் நடக்கிறது. 3-வது மற்றும் கடைசி போட்டி சவுத்தாம்ப்டனில் ஜூன் 26-ம் தேதி நடக்கிறது.
இங்கி. வீரர்கள்...
இதற்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம் வருமாறு:-
1. மோர்கன் (கேப்டன்), 2. மொயீன் அலி, 3. பேர்ஸ்டோவ், 4. சாம் பில்லிங்ஸ், 5. ஜோஸ்ட் பட்லர், 6. சா்ம கர்ரன், 7. டாம் கர்ரன், 8. லியம் டாசன், 9. கிறிஸ் ஜோர்டான், 10. லியம் லிவிங்ஸ்டோன், 11. தாவித் மலான், 12. அடில் ரஷித், 13. ஜேசன் ராய், 14. டேவிட் வில்லே, 15. கிறிஸ் வோக்ஸ், 16. மார்க் வுட்.
6 வருடங்களுக்கு...
கிறிஸ் வோக்ஸ் இங்கிலாந்து டி20 அணிக்காக 2015-ம் ஆண்டு நம்பவர் மாதம் விளையாடியிருந்தார். அதன்பின் 6 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் அணியில் இடம் பிடித்துள்ளார். ‘‘கிறிஸ் வோக்ஸ், டேவில் வில்லே மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்கள். அவர்கள் இருவரும் அணியில் இடம் பிடித்துள்ளதால், வலுவாக அணியை பெற்றுள்ளோம்’’ என்று இங்கிலாந்து பயிற்சியாளர் சில்வர்வுட் தெரிவித்துள்ளார்.
காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடாத பென் ஸ்டோக்ஸ், ஜாஃப்ரா ஆர்ச்சர் இலங்கை தொடரிலும் இடம்பெறவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


