முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேச துரோக வழக்கு பதிவு: நடிகை ஆயிஷா முன்ஜாமீன் கோரி மனு

திங்கட்கிழமை, 14 ஜூன் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள லட்சத்தீவுகளின் நிர்வாக தலைவராக பிரபுல் ஹோடா படேல் செயல்பட்டு வருகிறார். பிரபுல் ஹோடா படேல் தலைமையிலான நிர்வாகம் லட்சத்தீவில் பல்வேறு சட்டத்திருத்தங்களை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.  குறிப்பாக, மாட்டு இறைச்சி பயன்பாட்டிற்கு தடை, மது அருந்த விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கம், சட்டவிரோதமாக மீனவர்களால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக குடிசைகளை அப்புறப்படுத்துதவும் சட்டம் இயற்றப்பட உள்ளது. 

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியிலான குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் பழக்கம் உள்ளிட்ட குற்றங்களை தடுக்கும் வகையில் சமூக எதிர்ப்பு தடுப்பு சட்டமும் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது அவர்களின் படகுகளில் அரசு அதிகாரி ஒருவரும் பயணிப்பார் என தெரிவிக்கப்பட்டது. போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இரண்டுக்கும் அதிகமான குழந்தைகள் உள்ள குடும்ப உறுப்பினர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட தடை, கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகள் அகற்றம், உரிய ஆவணங்கள் இன்றி படகுகளை அதன் உரிமையாளர்கள் வேறுநபர்களுக்கு வாடகைக்கு விடக்கூடாது போன்ற சட்ட திருத்தங்களை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.   

ஆனால், லட்சத்தீவுகளில் பெரும்பான்மை மக்கள் தொகையாக இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் உள்ள நிலையில் நிர்வாகத்தின் சீர்திருத்தங்களுக்கு மக்களிடையே பெரும் எதிர்ப்பு நிலவி வருகிறது. பிர்புல் ஹோடா படேலை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. 

லட்சத்தீவு விவகாரம் கேரள தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தினமும் விவாதங்களும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், லட்சத்தீவு விவகாரம் குறித்து கேரளாவில் உள்ள பிரபல செய்தி தொலைக்காட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விவாதம் ஒன்று நடைபெற்றது.  அந்த விவாத நிகழ்ச்சியில் கேரளாவின் பிரபல பெண் டைரக்டரும், நடிகையும், சமூகசெயற்பாட்டாளருமான ஆயிஷா சுல்தானா பங்கேற்றார்.

லட்சத்தீவுகளில் ஒன்றான ஷட்லட் தீவை சேர்ந்த ஆயிஷா சுல்தானா கேரளாவில் வசித்து வரும் நிலையில் அந்த விவாத நிகழ்ச்சியின்போது, கொரோனா வைரசை லட்சத்தீவு மக்களுக்கு எதிராக உயிரி ஆயுதமாக மத்திய அரசு பயன்படுத்துகிறது. பிரபுல் ஹோடா படேலை மத்திய அரசு உயிரி ஆயுதமாக பயன்படுத்துகிறது என கூறினார். 

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆயிஷா சுல்தானா மீது லட்சத்தீவு போலீசார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர். கேரளாவிலும் சுல்தானா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள ஆயிஷா சுல்தானா எந்நேரமும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் இருந்து தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி கேரள ஐகோட்டில் ஆயிஷா சுல்தானா நேற்று மனுத்தாக்கல் செய்துள்ளார். கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்ஜாமீன் வழங்கக்கோரி ஆயிஷா சுல்தானா தாக்கல் செய்துள்ள மனு கேரள ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரலாம் என எதிர்ப்பார்க்கபப்டுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து