முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் ரஜினி நாளை அமெரிக்கா பயணம்

வியாழக்கிழமை, 17 ஜூன் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னை : மருத்துவ பரிசோதனைக்காக நாளை அமெரிக்கா செல்ல உள்ள நடிகர் ரஜினிகாந்த், அங்கு சிறிது காலம் ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.

சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பின், சிறிது காலம் ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளார். 

கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் சிறப்பு தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ள ரஜினி, இதற்காக மத்திய அரசிடம் சிறப்பு அனுமதியும் கோரி இருந்தார்.   தற்போது, நடிகர் ரஜினிகாந்த், தனி விமானத்தில் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து அவர் நாளை 19-ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். அவரது குடும்பத்தினரும் உடன் செல்ல உள்ளார்களாம். 

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவும், மருமகன் தனுஷும் தற்போது அமெரிக்காவில் தான் உள்ளனர். நடிகர் தனுஷ் தி கிரே மேன் எனும் ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக கடந்த பிப்ரவரி மாதமே அமெரிக்கா சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து