முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 18 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தற்போது வரை நீட் தேர்வு நடைமுறையில் இருப்பதால் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அதற்காக மாணவர்கள் தயாராகும் சூழல் உள்ளது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது, 

கடந்த 2010 டிசம்பர் 27-ம் தேதி மருத்துவத்துக்கு நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்தியது இந்திய மருத்துவக் கழகம். 2011 ஜனவரி 6-ம் தேதி தமிழகத்தில் நீட் தேர்வுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போது தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி இருந்தது. அ.தி.மு.க. ஆட்சியில்தான் நீட் தேர்வு வந்தது. மேலும் நீட் தேர்வுக்கான பயிற்சி அரசுப்பள்ளிகளில் அ.தி.மு.க. அரசில்தான் தொடங்கியது.

தற்போது வரை நீட் தேர்வு நடைமுறையில் இருப்பதால் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. அரசின் தொடங்கிய பயிற்சி இப்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி நீட் தேர்வு ரத்து செய்யப்படும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவை அரசு அமைத்துள்ளது.

இதுவரை அந்த குழு 4 கூட்டங்களை நடத்தியுள்ளது. ஒரு மாதத்திற்குள் அவர்கள் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். பிரதமரிடமும் நேரடியாக சந்தித்து நீட் தேர்வுக்கு விலக்களிக்க வேண்டும் என முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.   ஆனால், நீட் தேர்வுக்கான பயிற்சி தற்போது தொடங்கப்பட்டதுபோல எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பி.எஸ். அறிக்கை விடுகிறார். இது குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து