Idhayam Matrimony

ஸ்ட்ரை ரேட்டை வைத்து புஜாராவை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த தினேஷ் கார்த்திக்

வெள்ளிக்கிழமை, 18 ஜூன் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : புஜாராவின் ஸ்ட்ரைக் ரேட்டை வைத்து அவரை மட்டம் தட்டுவது சரியல்ல என்று தினேஷ் கார்த்திக் புஜாரா விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

வலுவான அணி 

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் அஸ்வின், ஜடேஜா இரண்டு ஸ்பின்னர்களுடன் இஷாந்த் சர்மா, ஷமி, பும்ரா ஆகிய வேகப்பந்து வீச்சும் பேட்டிங்கில் ஷுப்மன் கில், ரோகித் சர்மா, புஜாரா, விராட் கோலி, ரகானே, ரிஷப் பந்த் ஆகியோர் அடங்கிய வலுவான இந்திய அணி களமிறங்குகிறது.

‘நான்சென்ஸ்’... 

விராட் கோலி ஆரம்ப காலத்தில் கேப்டன்சிக்கு வந்த போது புஜாராவின் ஸ்ட்ரைக் ரேட் பற்றி சூசகமாகத் தெரிவித்தார், கோலி சொல்வதை வழிமொழியும் வழக்கம் கொண்ட ரவிசாஸ்திரியும் இந்தக் கருத்தை ஆதரித்தார். இந்நிலையில் டிவிட்டர் ஸ்பேசஸ் நிகழ்ச்சியில் தினேஷ் கார்த்திக் புஜாராவின் ஸ்ட்ரைக் ரேட் பற்றிய விவாதங்களைக் கருத்துகளை ‘நான்சென்ஸ்’ என்று புறந்தள்ளினார்.

வெற்றிகளை தர...

“நானும் ஆகாஷ் சோப்ராவும் இதில் ஒத்துப் போகிறோம். புஜாராவை அவரது ஸ்ட்ரைக் ரேட்டை வைத்து எடைபோடுவது சுத்த நான்சென்ஸ். 4 நாட்களில் 80-82% டெஸ்ட் போட்டிகள் முடிகின்றன. இதில் என்ன ஸ்ட்ரைக் ரேட் வேண்டிக்கிடக்கிறது. அவர் இந்தியாவுக்கு டெஸ்ட் வெற்றிகளைப் பெற்று தர முடியும் என்றால் தன் பாணியில் ஆடிவிட்டுப் போகட்டுமே.

நியாயம் இருக்கிறது?

இப்போது புஜாரா மாட்டிக் கொண்டுள்ளார், அவர் ஏன் ரன் எடுக்கவில்லை என்று நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். கடைசியாக அவர் ஆடிய பிட்ச்கள் பந்துகள் கடுமையாக திரும்பும் பிட்ச்கள், என்பதோடு 200 ரன்களை எடுக்கவே ஒட்டுமொத்த அணியுமே திணறும்போது புஜாரா சதமெடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?

ஆகாஷ் சோப்ரா...

நாம் கடினமான சில சூழ்நிலைகளில் ஆடினோம், மேலும் ஒருவரது ஆட்டத்தை மதிப்பிட அவரது எண்களை வைத்து மதிப்பிடக் கூடாது. சிட்னி டெஸ்ட் போட்டியை எடுத்துக் கொள்ளுங்கள், ஆகாஷ் சோப்ரா கூறுவது போல் எத்தனை அடிகளை அவர் உடலில் வாங்கினார். ஐ.பி.எல் போட்டியின் போது பாட் கமின்ஸ் என்னிடம் இது தொடர்பாகப் பேசினார். 

பவுலர்களுக்கு சாதகம்... 

இந்தியா டெஸ்ட்டை டிரா செய்ததற்கும் தோற்பதற்கும் இடையே உள்ள ஒரே வித்தியாசம் புஜாராதான் என்றார் பாட் கமின்ஸ். எவ்வளவு நேரம் ஆடினார், உடலில் பந்துகளை வாங்கினார். அப்போது பிட்சில் கொஞ்சம் சாதகம் பவுலர்களுக்கு இருக்கும் போது வேறு எந்த இந்திய பேட்ஸ்மெனுமே அங்கு தட்டுத் தடுமாறியிருப்பார்கள் என்பதே உண்மை.

பரவாயில்லை... 

அந்தப் போட்டியில் டிரா செய்து பிரிஸ்பன் போட்டிக்கு நம்மை சேதாரம் இல்லாமல் அழைத்துச் சென்றது புஜாராதான். அவர சதம் எடுக்கவில்லையே, அதனால் என்ன, பரவாயில்லை. அவர் திறமை நமக்கு தெரியும், அவரது தரமும் நமக்குத் தெரியும். நம் டெஸ்ட் அணியின் மிக முக்கியமான வீரர் புஜாரா என்பதில் எனக்கு எந்தவித ஐயமும் இல்லை. நாம் 100+ ரன்களை எடுத்தால்தான் சிறந்த பேட்ஸ்மென் என்று நம்பர் கேமில் போக வேண்டிய அவசியமில்லை” என்றார் தினேஷ் கார்த்திக்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து