முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐரோப்பிய கோப்பை கால்பந்து: டிரா ஆனது இங்கிலாந்து - ஸ்காட்லாந்து, குரேஷியா - செக் குடியரசு போட்டிகள்

சனிக்கிழமை, 19 ஜூன் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மாஸ்கோ : ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து - ஸ்காட்லாந்து, குரேஷியா -செக் குடியரசு அணிகள் மோதிய லீக் ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

சுவீடன் அணி... 

ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகர மைதானத்தில் நடந்த இ பிரிவு லீக் ஆட்டத்தில் சுலோவாக்கியா, சுவீடன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரு அணி வீரர்களும் கோல் போட மல்லுக்கட்டியதால் முதல் பாதியில் ஒரு கோல் கூட விழவில்லை.

சுலோவாக்கியா... 

தொடர்ந்து 2-வது பாதி ஆட்டத்தின் 77-வது நிமிடத்தில் கிடைத்த அருமையான பெனால்டி வாய்ப்பை சுவீடன் வீரர் எமில் போர்ஸ் பெர்க் கோலாக மாற்றி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இறுதியில் சுவீடன் அணி 1-க்கு 0 என்ற கோல் கணக்கில் சுலோவாக்கியா அணியை வென்றது.   

சமனில் முடிந்தது...

ஸ்காட்லாந்தில் நடந்த குரேஷியா, செக் குடியரசு அணிகளுக்கு இடையிலான டி பிரிவு லீக் ஆட்டம் வெற்றி, தோல்வியின்றி சமனில் முடிந்தது. முதல் பாதி ஆட்டத்தின் 37-வது நிமிடத்தில் செக் குடியரசு வீரர் பேட்ரிக் ஷிக்  பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார். தொடர்ந்து 47-வது நிமிடத்தில் குரேஷியா வீரர் பெரிசிக் அட்டகாசமாக கோல்  ஆட்டத்தை சமன் செய்தார். இறுதியில் ஆட்டம் 1-க்கு 1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. 

மற்றொரு ஆட்டம்

லண்டனில் நடந்த இங்கிலாந்து, ஸ்காட்லாந்து அணிகள் இடையிலான மற்றொரு டி பிரிவு லீக் ஆட்டமும் சமனில் முடிந்தது. மழையின் குறுக்கீட்டிற்கு மத்தியில் ஆட்டம் நடைபெற்ற நிலையில் இரு அணி வீரர்களும் கோல் போட மல்லுக்கட்டினர். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த 2-ம் பாதி ஆட்டத்திலும் கோல் விழாத நிலையில் ஆட்டம் சமனில் முடிந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து